உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேளாளர் மகளிர் கல்லுாரி 54வது ஆண்டு விழா

வேளாளர் மகளிர் கல்லுாரி 54வது ஆண்டு விழா

ஈரோடு:ஈரோடு, வேளாளர் மகளிர் கல்லுாரியின், 54-வது ஆண்டு விழா, வேளாளர் கல்வி அறக் கட்டளை தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. கல்லுாரி செயலர் சந்திரசேகர் வாழ்த்துரை வழங்கினார். கல்லுாரி முதல்வர் ஜெயந்தி ஆண்டறிக்கை வாசித்தார். உடுமலை ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவன தலைவர் ராமசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். திருச்சி பேங்க் ஆப் பரோடா வங்கி மண்டல மேலாளர் சாமுவேல் ஸ்டீபன், மண்டல வணிக மேம்பாட்டு மேலாளர் அனுராதா, மேலாளர் கார்த்திக் ராஜா வாழ்த்துரை வழங்கி, சாதனை மாணவிகள் மூவருக்கு, விருது வழங்கி பாராட்டினர். பல்வேறு அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.மேலும், 25 ஆண்டுகள் கல்லுாரியில் சிறப்பாக பணியாற்றிய வேதியியல் துறை இணை பேராசிரியர் மற்றும் தலைவர் விஜயா, கல்லுாரி அலுவலக ஊழியர் சதீஸ்குமார் ஆகியோருக்கு, பாராட்டு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. நிறைவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ