உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரத்தத்தில் கையெழுத்திட்டு கிராம உதவியாளர் போராட்டம்

ரத்தத்தில் கையெழுத்திட்டு கிராம உதவியாளர் போராட்டம்

ஈரோடு: தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, ரத்த கையெழுத்து மனு வழங்கும் இயக்கத்தை, ஈரோடு தாலுகா அலுவலகத்தில் நேற்று நடத்தினர்.அலுவலக உதவியாளர் சம்பளம், 15,700 ரூபாய் வழங்க வேண்டும். சி.பி.எஸ்., சந்தா இறுதித்தொகை தொடர்பாக, மூன்றாண்டுகளாக தலைமை செயலகத்தில் நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். பதவி உயர்வுக்கு, 10 ஆண்டு பணி நிறைவு செய்ய வேண்டும் என்ற காலவரம்பை, ஆறு ஆண்டாக மாற்ற வேண்டும். வருவாய் துறை காலி பணியிடங்களில், 50 சதவீதம் தங்களுக்கு ஒதுக்க வலியுறுத்தினர். ரத்தத்தால் தங்கள் கோரிக்கையை எழுதி, கையெழுத்திடும் போராட்டத்தை நடத்தினர். வரும், 17ல் முதல்வரிடம் மனுக்கள் வழங்கப்படும். பிப்., மாதம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ