உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேளாளர் மகளிர் கல்லுாரியில் மாணவியருக்கு வரவேற்பு

வேளாளர் மகளிர் கல்லுாரியில் மாணவியருக்கு வரவேற்பு

ஈரோடு: திண்டல் வேளாளர் மகளிர் கல்லுாரியில், முதலாமாண்டு சேரும் மாணவியருக்கு, அறிமுக விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் ஜெயந்தி வரவேற்றார். வேளாளர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவுடையப்பன் பங்கேற்றார். 'இளைய சமுதாயமும் சமூக ஊடகங்களும்' என்ற தலைப்பில் பேசினார். பெற்றோர், மாணவியருக்கான வாழ்வியல் செயல்பாடுகள் குறித்து, கோவை ஞான சஞ்ஜுவனம் சசிகுமார் பேசினார். கல்லுாரி செயல்பாடு, விதிகள் குறித்து இணை பேராசிரியை சபிதா கூறினார். கல்வி செயல்பாடு, கூடுதல் பாடநெறி மற்றும் மதிப்பு சேர்க்கப்பட்ட பாடநெறி குறித்து, பேராசிரியர் சாமுண்டீஸ்வரி விளக்கினார். பாடத்திட்டங்கள், தேர்வு நடைமுறை, மதிப்பெண் பகிர்வு குறித்து தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி கவிதா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி