உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போக்சோ வழக்கில் தொழிலாளி கைது

போக்சோ வழக்கில் தொழிலாளி கைது

காங்கேயம்: திண்டுக்கல் மாவட்டம், பெத்தனம்பட்டியை சேர்ந்தவர் மூக்கையன் என்பவரது மகன் முத்துப்பாண்டி, 19. இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் மொபைல்போன் மூலம் தொடர்பு கொண்டு காங்கேயம் பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். பின்பு சிறுமியின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி, பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர், காங்கேயம் போலீசில் புகார் அளித்ததன் அடிப்படையில், முத்துப்பாண்டியை போக்சோ வழக்கில் கைது செய்து, திருப்பூர் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை