| ADDED : ஜூலை 11, 2024 12:21 AM
பு.புளியம்பட்டி: பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசிக்கின்-றன. பவானிசாகர் வனத்தையொட்டி சுஜ்ஜில்குட்டை, துாரா மொக்கை கிராமத்தில் வசிக்கும் மக்கள் விவசாய பணிகளோடு, மீன் பிடிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். துாரா மொக்கை பகுதியை சேர்ந்த மீன் பிடிக்கும் தொழிலாளி கன-கராஜ், 44, என்பவர் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை ஒட்-டியுள்ள, விவசாய நிலத்தில் உள்ள குடிசை வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். வனப்பகுதியில் இருந்து நள்ளிரவு நேர த்தில் வெளியேறிய ஒற்றை யானை, குடிசை வீட்டின் அருகே வந்துள்-ளது. யானை வருவதை பார்த்த கனகராஜ், கூச்சலிடுவதற்குள் யானை அவரை துரத்தி தாக்கியதில் தலையில் பலத்த காயம-டைந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, ஒற்றை யானையை துரத்தி விட்டு, படுகாயமடைந்த கனகராஜை மீட்டு, சத்தியமங்-கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று காலை கனகராஜ் உயிரிழந்தார். இச்-சம்பவம் குறித்து விளாமுண்டி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, இதே பகுதியில் தர்பூசணி பயிருக்கு காவல் காத்திருந்த விவசாயியை, ஒற்றை யானை தாக்கி கொன்ற நிலையில், தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மீன் பிடி தொழிலாளி உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.