உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளை

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளை

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை, ஒரு லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, புகைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம், 48; இவர் மும்பை நகராட்சியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி, 41; மகன்கள் பிரவீன்குமார், திவாகர், கவியரசன் ஆகியோருடன் புகைப்பட்டியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுமதி மகன்களுடன் வீட்டை பூட்டிக்கொண்டு மேல்மலையனூர் கோவிலுக்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று காலை வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 10 சவரன் நகைகள், ரூ.ஒரு லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சமாகும். இது குறித்து சுமதி கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையடித்து சென்று குற்றவாளியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி