உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மருந்து வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது

மருந்து வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது

தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே மருந்து வியாபாரியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.தியாகதுருகத்தைச் சேர்ந்த சோலை மகன் வெங்கடேசன்,38; மருந்து மொத்த வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு சித்துாரில்இருந்து தனது மாருதி ஸ்விப்ட் காரில் தியாகதுருகம் சென்றார். அப்போது முன்னே சென்ற பைக்கை முந்தி செல்ல முயன்ற போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த பைக்கில் சென்ற புக்குளத்தைச் சேர்ந்த பாபு மகன் பரத்குமார், 26; வேலவன் மகன் கோபிநாத், 32; ஆகியோர் கார் கண்ணாடியை உடைத்து வெங்கடேசனை தாக்கியுள்ளனர்.இது குறித்த புகாரின் படி தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து பரத்குமார் மற்றும் கோபிநாத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை