உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உண்டியலை உடைத்த 2 பேர் கைது

உண்டியலை உடைத்த 2 பேர் கைது

உளுந்துார்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்த 2 பேரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். உளுந்துார்பேட்டை அடுத்த பெரும்பட்டு கிராமத்தில் ஸ்ரீ முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியலை நேற்று முன்தினம் இரவு மரம் நபர்கள் 2 பேர் உடைத்து காணிக்கை பணத்தை திருடு முயன்றனர். சத்தம் கேட்டு அருகில் இருந்த கிராம மக்கள் கோவிலுக்குள் சென்று அங்கு உண்டியலை உடைத்த 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பு.மாம்பாக்கம் அல்லாபகஷ் மகன் சையத்இக்பால், 30; முருகன் மகன் குரு, 19; எனத் தெரியவந்தது. உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை