உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளச்சாராய வழக்கில் மேலும் 3 பேர் கைது 7 பேரிடம் விசாரணை

கள்ளச்சாராய வழக்கில் மேலும் 3 பேர் கைது 7 பேரிடம் விசாரணை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் நேற்று மேலும் 3 பேரை கைது செய்த நிலையில், 5 தனியார் கெமிக்கல் நிறுவன உரிமையாளர்கள் உட்பட 7 பேரிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி ஆகிய பகுதியில் விற்கப்பட்ட மெத்தனால் கலந்த விஷச் சாராயத்தை குடித்த 58 பேர் இறந்தனர். பலர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், மெத்தனால் கலந்த சாராயம் விற்றவர்கள், சென்னையில் இருந்து மெத்தனால் வாங்கி விற்ற புதுச்சேரியை சேர்ந்த மாதேைஷ கைது செய்தனர்.தொடர்ந்து மாதேஷக்கு தனியார் நிறுவனங்களில் இருந்து மெத்தனால் வாங்கி கொடுத்த சென்னை மதுரவாயல் சிவக்குமார் உள்ளிட்ட 12 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.நேற்று கள்ளக்குறிச்சி ஏமப்பேர் தெய்வீகன், 35; சூளாங்குறிச்சி அய்யாசாமி, 55; அரிமுத்து ஆகிய 3 பேரை கைது செய்தனர். சி.பி.சி.ஐ.டி., போலீசார் இதுவரை 15 பேரை கைது செய்துள்ளனர்.இதில், சிவக்குமார், சென்னை மாதவரம், பூங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் கெமிக்கல் நிறுவனங்களில் இருந்து மெத்தனால் வாங்கி விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியில் விற்பனை செய்தள்ளதாக தெரிவித்துள்ளார்.தொடர்ந்து அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தனியார் கெமிக்கல் நிறுவன உரிமையாளர்கள் 5 பேர் உட்பட மொத்தம் 7 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.மேலும், மாதேஷை போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை