உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாராயம் விற்ற 5 பேர் கைது 550 லிட்டர் சாராயம் பறிமுதல்

சாராயம் விற்ற 5 பேர் கைது 550 லிட்டர் சாராயம் பறிமுதல்

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 5 பேரை போலீசார் கைது அவர்களிடமிருந்து 550 லிட்டர் சாராயத்சதை பறிமுதல் செய்தனர்.கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் இறந்தனர். பலர் சிகிச்சையில் உள்ளனர். இச்சம்பவத்தையொட்டி கள்ளக்குறிச்சி புதிய எஸ்.பியாக பொறுப்பேற்ற ரஜத் சதர்வேதி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் முற்றிலும் ஒழிக்க போலீசாருக்கு அதிரடி உத்திரவிட்டார். இதன் பேரில் போலீசார் சங்கராபுரம் பகுதி கிராமங்களில் சாராய சோதனையில் ஈடுபட்டனர்.இதில் சாராயம் விற்ற மையனுார் அந்தோணிராஜ், 28; விரியூர் மரியசூசை, 46 ;அரசம்பட்டு ராமர், 52; புதுபாலப்பட்டு சக்திவேல், 25; சேஷ சமுத்திரம் சிங்காரம் மகன் கோவிந்தன், 34; ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 10 லாரி டியூப்களில் வைத்திருந்த 550 லிட்டர் கள்ளச் சாராயத்தை கைபற்றி வழக்கு பதிந்து கைதானவர்ககளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை