உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஒன்றரை வயது குழந்தை சாவு

ஒன்றரை வயது குழந்தை சாவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே உடல்நிலை பாதித்த ஒன்னரை வயது பெண் குழந்தை இறந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த திம்மஞ்சூர் சேர்ந்தவர் ஏழுமலை,28; இவருக்கு தேஜாஸ்ரீ என்ற ஒன்னரை வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பிறந்த நாள் முதல் குழந்தை தேஜாஸ்ரீக்கு கை மற்றும் கால்களில் தானாக ரத்தம் வடிதல், மூச்சு திணறல் போன்ற உடல்நல குறைபாடு காரணங்களால் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் குரூரில் தனது பெற்றோர் வீட்டில் இருந்த மகலாட்சுமி, தனது மகள் தேஜாஸ்ரீக்கு பால் கொடுத்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடன் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தை தேஜாஸ்ரீ இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ