உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப்பள்ளி ஆய்வு

மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப்பள்ளி ஆய்வு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப்பள்ளியை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி நகரம் மந்தைவெளி பகுதியில் பாடசாலை மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பராமரிக்கப்படும் மனவளர்ச்சி குன்றிய, புற உலகு சிந்தனையற்றோர், பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளி சிறார்களுக்கான சிறப்பு கல்வி, பேச்சுப்பயிற்சி, இயன்முறை பயிற்சி அளிக்கப்படுவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு சிறார்களின் வளர்ச்சி குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை