உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெரியாயி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா

பெரியாயி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஆடிப்பெருக்கையொட்டி பெரியாயி அம்மன் கோவிலில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் நந்தவனத்தில் உள்ள பெரியாயி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் பலர் தங்களது குடும்பத்தினருடன் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு நடத்தினர். சிலர் கோழி, ஆடு பலி கொடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து பக்தர்கள் பெரியாயி அம்மன் சுவாமி மீது மஞ்சள் மற்றும் குங்குமம் துாவி, 30 அடி நீளமுள்ள மாலை அணிவித்து, 5 கிலோ எடை கொண்ட கற்பூரத்தை ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை