உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆக்கிரமிப்பு பாதை மீட்பு

ஆக்கிரமிப்பு பாதை மீட்பு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே பாதை ஆக்கிரமிப்பு வருவாய்த் துறை, போலீசார் முன்னிலையில் மீட்கப்பட்டது.உளுந்துார்பேட்டை அடுத்த நெய்வனை பகுதியில் பட்டியலினத்தவர்களுகான பஸ் நிலையத்திற்கு செல்லும் பாதையை ஆக்கிரமிப்பாளர்கள் வேலி மற்றும் கழிவறை கட்டி ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பலமுறை அதிகாரிகளின் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவின்பேரில், வருவாய்த்துறை, உளுந்துார்பேட்டை போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதையை மீட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி