உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆட்டோ டிரைவர் தாக்கு; 11 பேர் மீது வழக்கு

ஆட்டோ டிரைவர் தாக்கு; 11 பேர் மீது வழக்கு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் ஆட்டோ டிரைவரைத் தாக்கிய 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து ஒருவரை கைது செய்தனர்.திருக்கோவிலுார், தாசார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மணிமாறன், 28; ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் மதியம் திருக்கோவிலுார், செவலை ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து பயணியை ஏற்றிக் கொண்டு ஐந்து முனை ரோடு நோக்கிச் சென்றார்.இந்தியன் வங்கி அருகே, முன்னால் நின்றிருந்த காரை வழிகேட்டு ஹாரன் அடித்தார். இதனால் ஆத்திரமடைந்து காரில் இருந்து இறங்கிய முரளி, 60; மற்றும் அவருடன் வந்தவர்கள் மணிமாறனிடம் தகராறு செய்து தாக்கினர்.மணிமாறன் கொடுத்த புகாரின் பேரில் முரளி, ராஜா, 53; உட்பட 11 பேர் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து, ராஜாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ