உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இருதரப்பினர் மோதல் 15 பேர் மீது வழக்கு

இருதரப்பினர் மோதல் 15 பேர் மீது வழக்கு

திருக்கோவிலுார், : அரகண்டநல்லுார் அருகே குடிநீர் பைப் லைன் போட்டது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.அரகண்டநல்லுார் அடுத்த அந்திலியைச் சேர்ந்தவர் சண்முகம், 56; டேங்க் ஆபரேட்டர். நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் அதே ஊரைச் சேர்ந்த ஞானபிரகாசம் அவரது ஆதரவாளர் சத்தியமூர்த்தி இருவரும் குடித்துவிட்டு குடிநீர் பைப் போட்டது தொடர்பாக திட்டிக் கொண்டிருந்தனர்.இதனை தட்டிக்கேட்ட சண்முகத்தை தாக்கினர். இதனால், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இது குறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார், இருதரப்பையும் சேர்ந்த 15 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை