| ADDED : ஜூன் 11, 2024 11:24 PM
கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் அருகே நிலப்பிரச்னையில் முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.கச்சிராயபாளையம் அடுத்த எலியத்துார் காட்டுகொட்டாய் சேர்ந்தவர் அண்ணாதுரை,67; இவருக்கு சொந்தமான நிலத்தில் கரும்பு, நெல் பயிர் சாகுபடி செய்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னசாமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஜெயராமனுக்கும் நிலம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இதனால் கடந்த மார்ச் 12ம் தேதி ஜெயராமன் தனது ஆதரவாளர்கள் பழனி, பாலு, கண்ணன் ஆகியோருடன் சென்று ஜே.சி.பி., இயந்திரம் மூலம் பயிர்களை அழித்து சேதப் படுத்தியுள்ளனர். இது குறித்து கேட்ட அண்ணாதுரையை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இது குறித்து அண்ணாதுரை கொடுத்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.