உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாமியார் மீது சுடு தண்ணீர் ஊற்றிய மருமகள் மீது வழக்கு

மாமியார் மீது சுடு தண்ணீர் ஊற்றிய மருமகள் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் குடும்ப பிரச்னையில் மாமியார் மீது சுடு தண்ணீர் ஊற்றிய மருமகள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.கள்ளக்குறிச்சி கோட்டைமேட்டை சேர்ந்தவர் சின்னதம்பி மனைவி செல்லம்,50; இவருக்கும், இவரது மருமகள் பிரியதர்ஷினிக்கும் அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டு வந்தது. கடந்த 2ம் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதில், மருமகள் பிரியதர்ஷினி சுடு தண்ணீரை மாமியார் செல்லத்தின் மீது ஊற்றினார். காயமடைந்த செல்லம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் பிரியதர்ஷினி மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை