உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முன்விரோத தகராறில் நான்கு பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறில் நான்கு பேர் மீது வழக்கு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே முன்விரோத தகராறில் இரு தரப்பையும் சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருக்கோவிலூர் அடுத்த எடுத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேல், 55; கடந்த 1ம் தேதி மனைவி பழனியம்மாளுடன் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த மனைவியின் தம்பி சக்திவேல், 45; முன் விரோதம் காரணமாக குழந்தைவேலுவை திட்டி தாக்கினார்.இந்த மோதலில் குழந்தைவேலு அவரது மகன்கள் மணிகண்டன், 29; விக்னேஷ், 25; ஆகியோர் திருப்பி தாக்கினர். இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் நான்கு பேர் மீது திருப்பாலபந்தல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ