| ADDED : ஆக 13, 2024 10:39 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த வாணியந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., செல்வகணேஷ் வரவேற்றார். முகாமில், உதயசூரியன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று, முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.தொடர்ந்து, அரசு துறை அலுவலர்கள் மூலம் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், வாணியந்தலில் ரூ.16.75 லட்சம் மதிப்பிலான புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறந்து வைக்கப்பட்டது. பின்னர் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் 100 வீடுகளுக்கான பணி ஆணை மற்றும் ஊரக வீடுகள் பழுதுநீக்கம் திட்டத்தில் 70 பயனாளிளுக்கு பணி ஆணை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், தாசில்தார் சசிகலா, பி.டி.ஓ., பூமா, ஒன்றிய செயலாளர்கள் அரவிந்தன், ஆறுமுகம், சங்கராபுரம் ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், துணை சேர்மன் அன்புமணிமாறன், இளைஞரணி துணை அமைப்பாளர் அருள், ஒன்றிய கவுன்சிலர் பிரியா ராஜாராஜம், ஊராட்சி தலைவர் சிங்காரம் ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.