உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பாவந்துாரில் மக்களுடன் முதல்வர் முகாம்

பாவந்துாரில் மக்களுடன் முதல்வர் முகாம்

ரிஷிவந்தியம்: பாவந்துாரில் நடந்த ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கலெக்டர், எம்.எல்.ஏ., மனுக்களை பெற்றனர்.ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரில் நடந்த முகாமிற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்து பேசியதாவது: அரசு அலுவலர்கள் மக்களின் இருப்பிடத்திற்கே நேரடியாக சென்று அவர்களின் குறைகள், தேவைகளை கேட்டறிந்து சரிசெய்யும் விதமாக இம்முகாம் நடக்கிறது.இதில், பெறப்படும் மனுக்கள் மீது விசாரணை செய்து, அதில் தகுதி வாய்ந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேசினார். தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது.முகாமில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கீதா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், பாரதிதாசன், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், துணை சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை, தாசில்தார் பாலகுரு, பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகரன், நடராஜன், மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜி, ஊராட்சி தலைவர் ராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை