மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
12 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
12 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
15 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
16 hour(s) ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்லுாரி சந்தை நிகழ்ச்சியினை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலியில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கல்லுாரி சந்தை நிகழ்ச்சியினை கலெக்டர் பிரசாந்த் குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்து பேசினார்.கல்லுாரி சந்தை நிகழ்ச்சி மூலம் அரசின் திட்டங்கள் குறித்து மாணவிகளாகிய நீங்கள் அனைவரும் அறிந்துகொள்ள முடியும். தற்போது புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களாகிய நீங்கள் எதிர்காலத்தில் தொழில் தொடங்கி தொழிலதிபர்களாக வளர்ந்து பிறருக்கு வேலை தருபவர்களாக முன்னேற வேண்டும். சிறு, குறு வியாபாரிகளுக்கு அரசின் சார்பில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. படித்து வேலையில் சேர்வதை மட்டும் குறிக்கோளாக வைத்துக்கொள்ளாமல் தொழில் தொடங்கி வாழ்வில் முன்னேறலாம். இதற்கு கல்லுாரி சந்தை நிகழ்ச்சியை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்கி பயனடைய வேண்டுமென கலெக்டர் பிரசாந்த் தெரிவித்தார்.நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், ஆர்.கே.எஸ்., கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர், துணை முதல்வர் ஜான்விக்டர் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
15 hour(s) ago
16 hour(s) ago