உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுார் அரசு கல்லுாரியில் 10ம் தேதி கலந்தாய்வு துவங்குகிறது

திருக்கோவிலுார் அரசு கல்லுாரியில் 10ம் தேதி கலந்தாய்வு துவங்குகிறது

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வரும் 10ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்குகிறது.கல்லுாரி முதல்வர் மகாவிஷ்ணு செய்திக்குறிப்பு:திருக்கோவிலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., வணிகவியல், பி.எஸ்சி., வேதியியல், கணினி அறிவியல் ஆகிய 5 பாட பிரிவுகளுக்கு வரும் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. தரவரிசையில் முதல் 300 வரிசையில் உள்ள மாணவர்கள் இதில் பங்கு பெற்று, உரிய பட்டப் படிப்பில் சேரலாம்.இவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், மொபைல் போன் வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் காலை 9:30 மணிக்கு முன்னதாகவே கல்லுாரியில் மாணவர் சேர்க்கை நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும். டவுன்லோட் செய்யப்பட்ட விண்ணப்பம், 10, 11, 12 ம் வகுப்பிற்கான மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் அசல் மற்றும் இரண்டு நகல்கள், பாஸ்போர்ட் அளவு மூன்று புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அடையாள அட்டை அசல் மற்றும் மூன்று நகல்களுடன், உரிய சேர்க்கை கட்டணத்தையும் எடுத்து வர வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை