உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கோடை பயிர் சாகுபடி குறித்து வயல் ஆய்வு

கோடை பயிர் சாகுபடி குறித்து வயல் ஆய்வு

தியாகதுருகம், : தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டு கிராமத்தில் வேளாண் துறை சார்பில் கோடையில் பயிர் சாகுபடி குறித்த வயல் ஆய்வு நடந்தது.சென்னை, வேளாண்மை இயக்குனரக துணை இயக்குனர் கோப்பெருந்தேவி வயல்களை ஆய்வு செய்தார். பெரியமாம்பட்டு கிராமத்தில் விவசாயிகள் சுப்ரமணியன், ராஜேந்திரன் ஆகியோரது நிலத்தில் பயிர் செய்யப்பட்ட மக்காச்சோளப் பயிரில் கோடை பருவத்தில் 'ஒரு கிராமம்; ஒரு பயிர்' திட்டத்தின்கீழ் பூச்சி, நோய், உரம், நீர் மேலாண்மை போன்றவைகளை கண்காணிப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.தொடர்ந்து ஆடுதொடா, நொச்சி கன்றுகள் நட்டு பூச்சி தாக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. தியாகதுருகம் வேளாண்மை விரிக்க மைய அலுவலகத்தில் இடுபொருட்கள் தளசக்கி கம்பு, வம்பன் 11 உளுந்து, தார்பாய்கள், பண்ணைக் கருவிகள் தொகுப்பு, மண்வள அட்டை போன்றவைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.ஆய்வு பணிகளில் வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார் முன்னிலை வகித்தார்.வேளாண்மை உதவி இயக்குனர்கள் (திட்டங்கள்) பெரியசாமி, (தரக்கட்டுப்பாடு), துணை இயக்குனர்கள் அன்பழகன், லலிதா, கோவிந்தராஜ், வேளாண்மை அலுவலர், சிவநேசன், விதை அலுவலர்கள் ஞானவேல், சந்திரமோகன், துரைராஜ், அமிர்தலிங்கம், ரவி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை