உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குறைகேட்புக் கூட்டம்: 554 மனுக்கள் குவிந்தன

குறைகேட்புக் கூட்டம்: 554 மனுக்கள் குவிந்தன

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 554 மனுக்கள் பெறப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார்.இதில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, வேளாண்மைத் துறை, காவல் துறை, ஊரக வளார்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், கூட்டுறவு கடனுதவி, மின்வாரியம் தொடர்பாக கோரிக்கை மற்றும் புகார்கள் என 554 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது விசாரணை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, தமிழக அரசு ஒதுக்கீடு செய்த 17 வாகனங்களின் சாவிகளை வட்டார வளர்ச்சி அலுவலக வாகன ஓட்டுநர்களிடம் வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் உட்பட அனைத்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி