உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் விபத்தில் காயமடைந்தவர் சாவு

பைக் விபத்தில் காயமடைந்தவர் சாவு

கச்சிராயபாளையம்: நல்லாத்துாரில் நடந்த பைக் விபத்தில் சிக்கிய வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கச்சிராயபாளையம் அடுத்த நல்லத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் மகன் திலீப்குமார், 21; டிரைவர். இவர், கடந்த 7ம் தேதி இரவு 9:00 மணியளவில் கச்சிராயபாளையம் - கள்ளக்குறிச்சி சாலையில் நல்லத்துார் டாஸ்மாக் கடை அருகே பைக்கில் நின்று கொண்டிருந்தார்.அப்போது பின்னால் மண்மலை கிராமத்தைச் சேர்ந்த கவுதம், 31; என்பவர் ஓட்டி வந்த பைக் திலீப்குமார் பைக் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த திலீப்குமார் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை இறந்தார்.புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை