உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

கள்ளக்குறிச்சி: சிறுவங்கூர் ஆதி திராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் ஆதி திராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் ரூ.88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நான்கு புதியவகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது. முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் குத்துவிளக்கு ஏற்றினார்.சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி, கள்ளக்குறிச்சி ஒன்றிய துணை சேர்மன் விமலா முருகன், கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட அவைத் தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி பெருமாள், மாவட்டத் துணைச் செயலாளர் காமராஜ், ஊராட்சி தலைவர் சந்திரா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை திலகவதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்