உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஊராட்சி செயலர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

ஊராட்சி செயலர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி : ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் சத்தியராஜ், பொருளாளர் திருமால்வளவன், ஓய்வு பெற்ற சங்க பொதுச் செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர்.மாநில பொருளாளர் மகேஸ்வரன் கோரிக்கை வலியுறுத்தி பேசினார். இதில் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சங்க நிர்வாகிகள் சக்திவேல், சிவசூரியன், செல்லதுரை, தணிகைவேல், சீனிவாசன், சத்யா உட்பட பலர் பங்கேற்றனர். சங்கர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை