உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து

தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து

கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் அருகே தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் பயிலும் 30 மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு, நேற்று மாலை பஸ் புறப்பட்டது. செல்லும் வழியில் மாணவ, மாணவிகள் 10 பேர் இறங்கினர். மீதமுள்ள 20 மாணவர்களுடன் சென்ற பஸ், கச்சிராயபாளையம் அடுத்த வெங்கட்டாம்பேட்டை அருகே சென்ற போது டிரைவர் கணேஷ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சதாஞ்சனன்,16; என்ற மாணவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மீதமுள்ள மாணவர்கள் காயமின்றி தப்பினர்.விபத்து குறித்து கச்சிராயபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி