உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு துறை அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கல்

அரசு துறை அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழக அரசு சார்பில் ஆர்.டி.ஓ.,க்கள் மற்றும் தாசில்தார்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 5 புதிய வாகனங்களின் சாவியினை கலெக்டர் பிரசாந்த் அலுவலர்களிடம் வழங்கினார்.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ.,க்கள் மற்றும் கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, சங்கராபுரம் தாசில்தார்களின் அலுவலக பயன்பாட்டிற்காக 5 புதிய வாகனங்களின் சாவியை அந்தந்த அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், தாசில்தார்கள் கள்ளக்குறிச்சி பிரபாகரன், சங்கராபுரம் கோபாலகிருஷ்ணன், உளுந்துார்பேட்டை விஜயபிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி