உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நீதிமன்ற வளாகத்தில் ரகளையில் ஈடுபட்டவர் கைது

நீதிமன்ற வளாகத்தில் ரகளையில் ஈடுபட்டவர் கைது

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வரை போலீசார் கைது செய்தனர். மணலுார்பேட்டையைச் சேர்ந்தவர் புலியன் மகன் அய்யனார், 49; நேற்று முன்தினம் மதியம் வழக்கு விசாரணை தொடர்பாக திருக்கோவிலுார் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். குடிபோதையில் நீதிமன்ற ஊழியர்களை அசிங்கமாக திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து அலுவலக உதவியாளர் மாலினி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து அய்யனாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி