உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருமாவளவனை எதிர்த்து கேள்வி பெண்ணின் வீடியோவால் பரபரப்பு

திருமாவளவனை எதிர்த்து கேள்வி பெண்ணின் வீடியோவால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து நேற்று வரையில் 57 பேர் உயிரிழந்தனர். வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.தொடர்ந்து, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அங்கு வந்த நாச்சியாள் சுகந்தி என்ற பெண், 'வி.சி., கட்சியில் 4 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தற்போது சட்டசபை நடக்கிறது.சட்டசபையில் அரசை எதிர்த்து கேள்வி கேட்காமல் இங்கு வந்து மக்களை சந்திப்பதில் என்ன லாபம்' என கேள்வி எழுப்பினார்.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த பெண்ணை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, திருமாளவனை எதிர்த்து கேள்வி கேட்ட பெண்ணை, கட்சி நிர்வாகிகள் சூழ்ந்து திட்டித் தீர்த்தனர்.அதற்கு அந்த பெண், 'நான் ஒரு ஜார்னலிஸ்ட். கேள்வி கேட்பேன்' என்றார். பின்னர் அங்கிருந்த போலீசார் அப்பெண்ணை சமாதானம் செய்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை