| ADDED : ஆக 07, 2024 06:38 AM
தியாகதுருகம் : பழையஉச்சிமேடு கிராமத்தில் சிறுதானிய சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி நடந்தது.தியாகதுருகம் அடுத்த பழையஉச்சிமேடு கிராமத்தில் நடந்த பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் வனிதா(பொ) தலைமை தாங்கினார். உதவி வேளாண்மை அலுவலர் செல்வராஜ் வரவேற்றார். பயிற்சியில், மக்காச்சோள பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, சிறுதானிய சாகுபடி தொழில்நுட்பங்கள், வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், உயிரியல் கட்டுப்பாடு காரணிகள், உயிர் உரங்கள் மற்றும் நுண்ணுாட்ட உரங்கள் பயன்பாடு, மண் பரிசோதனை செய்வதன் அவசியம், தமிழ் மண்வளம் தளம், இயற்கை பூச்சி விரட்டிகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் இளையராஜா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் சூர்யா, ஆத்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவி, முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் கலைவாணன் நன்றி கூறினார்.