உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதியனுாரில் வாந்தி பேதி மருத்துவ குழுவினர் முகாம்

மதியனுாரில் வாந்தி பேதி மருத்துவ குழுவினர் முகாம்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே வாந்தி பேதியால் மருத்துவ குழுவினர் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். உளுந்துார்பேட்டை அடுத்த மதியனுார் பகுதியில் வாந்தி, பேதி ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர். அதன்பேரில் மருத்துவக் குழுவினர் மதியனுார் பகுதியில் நேற்று முகாமிட்டு ஆய்வு செய்தனர். அப்போது குடிநீருக்காக தோண்டிய பள்ளத்தில் கழிவு நீர் கலந்துள்ளது வாந்தி, பேதிக்கு காரணம் என கண்டறியப்பட்டது.பின்னர் அந்த பள்ளத்தை மூடவேண்டும் என அறிவுறுத்தினர். தொடர்ந்து கிராமத்தில் முகாமிட்டு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை