உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வயநாடு நிலச்சரிவு சம்பவம் பொது சேவை அமைப்பு நிவாரணம்

வயநாடு நிலச்சரிவு சம்பவம் பொது சேவை அமைப்பு நிவாரணம்

சங்கராபுரம்: சங்கராபுரம் பொது சேவை அமைப்பு மூலம் கேரளாவிற்கு நிவாரண தொகையாக 1.25 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக சங்கராபுரம் அனைத்து பொது சேவை அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் நிதி வசூலிக்கப்பட்டது.அனைத்து வியாபாரிகள் சங்கம், பெட்ரோல், டீசல் பெடரேசன், நெல் அரிசி ஆலை சங்கம், அரிமா, ரோட்டரி சங்கம், வள்ளலார் மன்றம், இன்னர் வீல் கிளப் போன்ற அமைப்புகள் வழங்கிய தொகை 1. 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கேரளா முதல்வரின் பேரிடர் நிதியாக கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்திடம் பொது சேவை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜனார்தனன், முத்துக்கருப்பன், குசேலன், ஆகியோர் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ