உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  சிவன் கோவிலில் 108 சங்காபிஷேகம்

 சிவன் கோவிலில் 108 சங்காபிஷேகம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேக வைபவம் நடந்தது. இதனையொட்டி நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, புன்னியாகவஜனமும் தொடர்ந்து, நடராஜர் மண்டபத்தில் சுவாமியை எழுந்தருளச் செய்து, கலச ஆவாஹணம் செய்தனர். பின், சிதம்பரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. உலக நலன் வேண்டி மகாசங்கல்பம், ஜபம், வேதபாராயணம் நடந்தது. மந்திரங்கள் வாசித்து 108 மூலிகை பொருட்களால் யாகம் வளர்க்கப்பட்டது. மகாபூர்ணாகுதிக்கு பின் சிறப்பு அலங்காரம் செய்து சோடசோபசாரம், மகா தீபாராதனை காண்பித்து 108 சங்காபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் வழிபாட்டில் பங்கேற்றனர். சதாசிவம் சிவாச்சாரியார் குழுவினர் சங்காபிஷேகத்தை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை