உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாடு திருடிய 2 பேர் கைது

மாடு திருடிய 2 பேர் கைது

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே மாடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மணம்பூடியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ராஜா, 38; இவருக்கு சொந்தமான 3 மாடுகளை மேய்ச்சலுக்காக தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் கட்டி வைத்திருந்தார். கடந்த 1ம் தேதி காலை சென்று பார்த்தபோது, 2 மாடுகளைக் காணவில்லை.ராஜா அளித்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், தனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 35; கீழத்தாழனுார் காளி, 24; ஆகிய இருவரும் திருடியது தெரியவந்தது. உடன் இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை