உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  2 கூரை வீடுகள் தீப்பிடித்து சேதம்

 2 கூரை வீடுகள் தீப்பிடித்து சேதம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த சோழவாண்டியபுரத்தில் 2 கூரை வீடுகள் தீ பிடித்து எரிந்த சேதமானது. திருக்கோவிலுார் சோழவாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ஏழுமலை, 35; மற்றும் துரைசாமி, 50; இவர்கள் நேற்று காலை வீட்டை பூட்டிக் கொண்டு வயலுக்கு வேலைக்குச் சென்றிருந்தனர். பிற்பகல் 3:15 மணியளவில் 2 வீடுகளிலும் திடீரென தீ பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த திருக்கோவிலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ், சிறப்பு நிலை அலுவலர் விநாயகம் குழுவினருடன் சென்று ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இதில் இரண்டு வீடுகளிலும் இருந்த பொருட்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி