உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  வாடகை பாத்திர கடைக்காரர் கொலையில் 5 பேருக்கு ஆயுள்

 வாடகை பாத்திர கடைக்காரர் கொலையில் 5 பேருக்கு ஆயுள்

கள்ளக்குறிச்சி: வாடகை பாத்திரக்கடைக்காரர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி கோர்ட் தீர்ப்பு அளித்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், புதுஉச்சிமேடு காலனியை சேர்ந்தவர் நாராயணசாமி, 45; இவர், கொங்கராயபாளையத்தில் சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடும் கடை நடத்தி வந்தார். கடந்த 2022ம் ஆண்டு மே 26ம் தேதி, கடை முன்பு புதுஉச்சிமேட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராமு, 29; பைக் நிறுத்தியதை நாராயணசாமி தட்டிகேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சமாதான ம் செய்து அனுப்பி வைத்தனர். அன்றைய தினம் இரவு, கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற நாராயணசாமியிடம், ராமு, அவரது தந்தை ராஜேந்திரன், 53; தாய் பரமேஸ்வரி, 49; உறவினர்கள் ஜெயசங்கர் மகன்கள் அஜித்குமார், 25; அலெக்ஸ்பாண்டியன், 33; ஆகியோர் தகராறு செய்தனர். அப்போது, கத்தியால் வெட்டியதில் நாராயணசாமி சம்ப வ இடத்திலேயே இறந்தார். வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து, ராமு, ராஜேந்திரன், அஜித்குமார், அலெக்ஸ்பாண்டியன், பரமேஸ்வரி ஆகிய 5 பேரை கைது செய்தனர் கள்ளக்குறிச்சி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜவேல் ஆஜரானார். விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி சையத்பர்கத்துல்லா நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றஞ்சாட்டப்பட்ட ராமு உள்ளிட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும்,. ராமு, ராஜேந்திரன் ஆகியோருக்கு தலா ரூ. 40,500, அஜித்குமார், அலெக்ஸ் பாண்டியன், பரமேஸ்வரிக்கு தலா ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டது. பரமேஸ்வரி வேலுார் பெண்கள் சிறையிலும், மற்ற நான்கு பேரும் கடலுார் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ