உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மாற்றுக் கட்சியினர் ஐ.ஜே.கே.,வில் ஐக்கியம்

 மாற்றுக் கட்சியினர் ஐ.ஜே.கே.,வில் ஐக்கியம்

திருக்கோவிலுார் : ஆவிகொளப்பாக்கத்தை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் ஐ.ஜே.கே., மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். திருக்கோவிலுார் அடுத்த ஆவிகொளப்பாக்கம் தனியார் பள்ளியின் தாளாளர் வசந்தன் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி ஐ.ஜே.கே., வில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் இணைந்தனர். அவர்களை செந்தில்குமார் சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் ரிஷிவந்தியம் தொகுதி மாவட்ட தலைவர் பொன்முடி, திருக்கோவிலுார் தொகுதி மாவட்ட செயலாளர் ராஜேஷ் குமார், இலக்கிய அணி மாநில செயலாளர் சிதம்பரநாதன், மாவட்ட பொருளாளர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்