உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மேகபாலீஸ்வரர் கோவிலில் அஷ்டமி, குரு பெயர்ச்சி விழா

மேகபாலீஸ்வரர் கோவிலில் அஷ்டமி, குரு பெயர்ச்சி விழா

கரூர், மே 2-நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை யொட்டி, சிறப்பு பூஜை நேற்று மாலை நடந்தது.அதில் மூலவர் கால பைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. பிறகு, காலபைரவர் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* குரு பெயர்ச்சி விழாயையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. நவக்கிரகங்களில் முக்கிய கிரகமான குரு பகவான், ஆண்டுக்கு ஒரு முறை ராசி விட்டு மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். நேற்று மாலை, 5:19 மணிக்கு குரு பகவான், மேஷ ராசியில் இருந்து, ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆனார்.அதையொட்டி, நேற்று நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில், நவக்கிரக மூர்த்திகளுக்கும், குரு பகவானுக்கும் விநாயகர் வழிபாடு, மஹா சங்கல்பம், சிறப்பு பூஜை, மஹா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, குரு பகவானை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ