உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர்

 ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர்

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் கார்த்திகை 1ம் தேதியை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்கு செல்ல மாலை அணிந்து கொண்டனர். கார்த்திகை மாதம் 1ம் தேதி, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து சபரி மலைக்கு செல்வது வழக்கம். நேற்று கார்த்திகை 1ம் தேதியை முன்னிட்டு, சங்கராபுரம் சன்னதி தெரு ஐயப்பன் கோவிலில் 50க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர். முன்னதாக கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஐயப்பனுக்கு பால், தயிர், நெய் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை