உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிராம மக்களுடன் பா.ஜ., கலந்துரையாடல்

கிராம மக்களுடன் பா.ஜ., கலந்துரையாடல்

திருக்கோவிலுார்,: ழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், 'கிராமம் தோறும் செல்வோம்' முகாமின் ஒரு பகுதியாக, வீரசோழபுரம் கிராமத்தில் பொதுமக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பா.ஜ., சார்பில் கிராமம் தோறும் செல்வோம் என்ற தலைப்பில் முகாம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் தெற்கு மாவட்டம், முகையூர் கிழக்கு ஒன்றியம், வீரசோழபுரம் கிராமத்தில் மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமையில் பிரசார பயணம் நடந்தது.மத்திய பா.ஜ., அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக வினியோகிக்கப்பட்டது. மாலையில் பொதுமக்களுடன் கலந்துரையாடி மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறினர்.மண்டல தலைவர்கள் ரவிச்சந்திரன், பத்ரி நாராயணன், அரிகிருஷ்ணன், தென்னரசு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். பொதுச் செயலாளர்கள் முரளி, சதாசிவம், பொருளாளர் குமாரசாமி,மூத்த தலைவர் காத்தவராயன், நிர்வாகிகள் கமலசேகரன், சந்தோஷ், குமார், ஆனந்த் குமார், திருமால், ஸ்ரீதேவி, முனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை