உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்களை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

பெண்களை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி : கச்சிராயப்பாளையம் அடுத்த பால்ராம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அசோக் மனைவி மீனாகுமாரி, 30; இவது நிலத்திற்கு அருகே சேமபாளையத்தைச் சேர்ந்த அருணாசலம், அழகேசன் ஆகியோரது நிலம் உள்ளது.கடந்த 17ம் தேதி அருணாசலம், அழகேசன் ஆகியோர் வி.ஏ.ஓ., மற்றும் சர்வேயர் மூலம் நிலத்தை அளந்தனர். அப்போது மீனாகுமாரி, அவரது உறவினர் லாவண்யா பக்கத்து நிலத்துக்காரர்களான தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் நிலத்தை எப்படி அளக்கலாம் என எதிர்ப்பு தெரிவித்து தடுத்தனர்.இதனால் ஆத்திரமடைந்த அருணாசலம், அழகேசன் ஆகியோர் மீனாகுமாரி, லாவண்யா ஆகியோரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் அருணாசலம், அழகேசன் ஆகியோர் மீது கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை