உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

 குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

மூங்கில்துறைப்பட்டு: நவ: மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுாரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் அர்ச்சனா காமராஜன் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரியதர்ஷினி, கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கிராமங்களில் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கும், 21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் திருமணம் நடைபெறுவதாக தெரிய வந்தால் மாவட்ட சமூக நல அலுவலகம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கிராமங்களில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நேர்ந்தால் 1098 என்ற எண்ணுக்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஊராட்சி செயலாளர் திருமாவளவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை