மேலும் செய்திகள்
சாதித்த மாணவிகள் பெருமிதம்
8 hour(s) ago
மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்
9 hour(s) ago
சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா
9 hour(s) ago
கள்ளக்குறிச்சி, - கள்ளக்குறிச்சியில் காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். கவுன்சிலர் தேவராஜ், வட்டார தலைவர்கள் அசோக், சரண்ராஜ் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் குமார் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி ஒருங்கிணைப்பாளர் தாமோதரன், மாநில மனித உரிமை துறை பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் தனபால், இளையராஜா, முன்னாள் ஒன்றிய சேர்மன் சீனுவாசன் பங்கேற்றனர்.கூட்டத்தில், கூட்டணி கட்சியினருடன் பேசி கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியை காங்., ஒதுக்கீடு செய்தல், பாக முகவர்கள் அனைவரையும் காங்., கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் பதிவு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முத்தமிழ்செல்வி, வீரமுத்து, துரைராஜ், சார்பு அணி மாவட்ட தலைவர்கள், மாதேஸ்வரன், சர்மிளா, மாநில நிர்வாகிகள் பவுனாம்பாள், அஞ்சலை, மாயஜோதி, ஆதில்கான் உட்பட பலர் பங்கேற்றனர். தமிழக மீனவர்களை சிறைபிடிக்கும் இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை அரசின் அராஜகத்தை கண்டிக்காத பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷம் எழுப்பி, கருப்பு பலுான்கள் பறக்கவிடப்பட்டது.
8 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago