உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

கள்ளக்குறிச்சி, : சின்னசேலம் அருகே மகளை காணவில்லை என்று தாயார் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.சின்னசேலம் அடுத்த கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மணியன் மகள் திலகவதி,30; மணியன் கடந்த 5 வருடங்களுக்கு முன் இறந்து விட்டதால், தாய் சரஸ்வதி மூன்று மகள்களையும் வளர்த்து வருகிறார்.கடந்த 22ம் தேதி இரவு சரஸ்வதி குடும்பத்தினர் சாப்பிட்டுவிட்டு துாங்கியுள்ளனர். மறுநாள் 23ம் தேதி அதிகாலை எழுந்து பார்த்த போது மூத்த மகள் திலகவதி வீட்டில் இல்லாததால், அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும்அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை.இதுகுறித்து அவரது தாய் சரஸ்வதி கொடுத்துள்ள புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை