உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகளை திருமணம் செய்து தராத தாய்க்கு கொலை மிரட்டல்: வாலிபர் மீது வழக்கு

மகளை திருமணம் செய்து தராத தாய்க்கு கொலை மிரட்டல்: வாலிபர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி அருகே மகளை திருமணம் செய்து தராத தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சியை சேர்ந்த சக்திவேல் மனைவி செல்வி, 36; இவர்களது மகள் சுகாசினியை அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் தெய்வீகன், 20; என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில் தனது மகளை வேறு நபருக்கு கடந்த 7 மாதங்கள் முன்பாக திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தெய்வீகன், நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பொரசக்குறிச்சியில் சக்தி கோவிலை சுத்தம் செய்துகொண்டிருந்த செல்வியை, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின்பேரில் வரஞ்சரம் போலீசார் தெய்வீகன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ