உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  தி.மு.க., சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

 தி.மு.க., சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

ரிஷிவந்தியம்: வாணாபுரத்தில் நரம்பியல் மற்றும் தண்டுவடம் தொடர்பான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. ரிஷிவந்தியம் தொகுதி வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஏற்பாட்டில் வாணாபுரத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. தி.மு.க., மாவட்ட துணைச்செயலாளர் அண்ணாதுரை, ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய செயலாளர் துரைமுருகன் முகாமினை துவங்கி வைத்தனர். திருவண்ணாமலையை சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டர்கள், சிறப்பு நரம்பியல் மற்றும் தண்டுவடம் தொடர்பான நோய்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் பங்கேற்ற 331 பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். 81 பேர் மேல்சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை