| ADDED : நவ 18, 2025 07:17 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் கூட்டத்தில் வெறி பிடித்த நாய்கள் சாலைகளில் நடந்து செல்பவர்களை துரத்திச் சென்று கடித்து குதறும் சம்பவமும் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களில் வடசேமபாளையம் விஷ்ணு, 4; காட்டுவனஞ்சூர் குப்பாயி, 50; மூக்கனுார் கார்த்திகா, 11; அ.பாண்டலம் கவுதம், 30; கிடங்கன்பாண்டலம் தமிழரசன், 12; எஸ்.வி.பாளையம் அசோதை, 57; கிடங்குடையான்பட்டு பெரியம்மா, 65; வடசெட்டியந்தல் பாவாடை, 52; கொசப்பாடி சுரேஷ், 40; சங்கராபுரம் நஸ்மா, 28; விரியூர் மரிய ஜோசப், 44; மஞ்சபுத்துார் பெரியநாயகம், 55; செல்லம்பட்டு முருகன், 60; வரகூர் ஆரோக்கியராஜ், 33; ஆகியோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சங்கராபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான நாய்கள் சாலையில் சுற்றி திரிவதால் வெளியே வரும நபர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து மாவட்ட நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.